ம.ம.க. 6-ந்தேதி ஆர்ப்பாட்டம்


ம.ம.க. 6-ந்தேதி ஆர்ப்பாட்டம்
x

சென்னை, மதுரையில் ம.ம.க. 6-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஜவாஹிருல்லா கூறினார்

திருநெல்வேலி

ஏர்வாடி:

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு எதிராக கவர்னர்கள் போட்டி ஆட்சி நடத்துகின்றனர். தேசிய புலனாய்வு முகமை தொடங்கப்பட்டபோது, 16 வழக்குகள் வரை மட்டுமே விசாரித்தனர். ஆனால் பிரதமர் மோடி பதவி ஏற்ற பிறகு ஆண்டுக்கு 373 வழக்குகள் வரை விசாரிக்கின்றனர். ஆட்சிக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் மீது தேசிய புலனாய்வு முகமையை ஏவி விடுகின்றனர். மாநில உரிமையை பறிக்கக்கூடிய வகையில் செயல்படும் தேசிய புலனாய்வு முகமையை கலைக்க வேண்டும். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சமூக நீதி அடிப்படையில் நல்லாட்சியாக, திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தி.மு.க. ஆட்சிக்கு விரோதமாக இணை ஆட்சி நடத்தி வருகின்றார். சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பல்வேறு மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். பேரணி மக்களை பிளவுபடுத்தக்கூடிய, மக்கள் மத்தியில் வேறுபாட்டை, வெறுப்பை விதைக்கும் பேரணி. அதற்கு தமிழக அரசு தடை விதித்தது பாராட்டுக்குரியது.

தமிழகத்தில் நடந்த பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவங்கள் கண்டிக்கத்தக்கதாகும். இந்த சம்பவங்கள் சமூக அமைதி, நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் செயல் ஆகும். இதில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

உபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தேசிய புலனாய்வு முகமையை கலைக்க வேண்டும், தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை, மதுரையில் அக்டோபர் 6-ந்் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story