நடமாடும் மருத்துவ முகாம்


நடமாடும் மருத்துவ முகாம்
x

ஆலங்காயம் அருகே நடமாடும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஆலங்காயம் வட்டாரத்திற்குட்பட்ட நாய்க்கனூர் ஊராட்சி, உமையப்ப நாய்க்கனூர் கிராமத்தில் நடமாடும் மருத்துவ முகாம் நடந்தது. இதில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் நடமாடும் மருத்துவ குழுவின் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம், இலவச நடமாடும் எக்ஸ் ரே மூலம் காசநோய் கண்டறியும் முகாம் மற்றும் கோடை காலத்தில் வெப்பத்தாக்கம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஓ.ஆர்.எஸ் வழங்கும் முகாம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக நாய்க்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் மேகலா திருப்பதி கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

முகாமில் நடமாடும் மருத்துவ குழு மருத்துவ அலுவலர் பிரசாந்த், திருப்பத்தூர் மாவட்ட நலக்கல்வி அலுவலர் பாலுசுந்தரம், ஆலங்காயம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரவணகுமார், நடமாடும் மருத்துவ குழுவினர், நடமாடும் எக்ஸ்ரே குழுவினர் (காசநோய்), சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story