நடமாடும் காசநோய் மருத்துவ முகாம்


நடமாடும் காசநோய் மருத்துவ முகாம்
x

பூங்குளம் கிராமத்தில் நடமாடும் காசநோய் மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூங்குளம் ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் நடமாடும் காசநோய் மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் நடைபெற்றது. முகாமை திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவ அலுவலர் பூவிழி, ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலி தினகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ருக்மணி மகேந்திரன் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story