குமரி அணைப்பகுதிகளில் மிதமான மழை


குமரி அணைப்பகுதிகளில் மிதமான மழை
x

குமரி அணைப்பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கடுமையாக தாக்கி வருகிறது. அதே வேளையில் சில பகுதிகளில் அவ்வப்போது சாரல் மற்றும் மிதமான மழை பெய்கிறது. மாவட்டத்தில் நேற்று பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதே வேளையில் குலசேகரம், திற்பரப்பு, சுருளகோடு உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது. பேச்சிப்பாறை அணையின் நீர்வரத்துப் பகுதிகளான மோதிரமலை, குற்றியாறு, கல்லாறு, கீழ் கோதையாறு பகுதிகள் சற்று கன மழை பெய்தது. மாவட்டத்தில் பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டுள்ள நிலை மற்றும் தொடர் சாரல் மழை பெய்வதால் விவசாயிகள் வேளாண்மை பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

-**


Next Story