புகார் அளிக்க கழிப்பறைகளில் நவீன வசதி


புகார் அளிக்க கழிப்பறைகளில் நவீன வசதி
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பேரூராட்சியில் புகார் அளிக்க கழிப்பறைகளில் நவீன வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

நீலகிரி

கோத்தகிரி,

ஆண்டுதோறும் நவம்பர் 19-ந் தேதி உலக கழிப்பறை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பொதுக்கழிப்பறைகள் நேற்று வண்ண காகிதங்களால் அலங்காரம் செய்யப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டியதன் அவசியம், சுற்றுப்புற சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து பொது கழிப்பறைகளில் ஏதேனும் குறைகள் இருப்பின், பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்கும் வகையில் கழிப்பறைகளில் கியூ.ஆர்.கோடு ஒட்டும் பணி நடைபெற்றது. இந்த பணியை செயல் அலுவலர் மணிகண்டன், ராம்சந்த் சதுக்கம் பகுதியில் கழிப்பறையில் தொடங்கி வைத்தார். இதில் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித், சுகாதார பணியாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் உலக கழிப்பறை தினத்தையொட்டி கெங்கரை கிராம ஊராட்சியில் தலைவர் முருகன் தலைமையில் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


Next Story