சோதனை சாவடியில் நவீன கண்காணிப்பு கேமராக்கள்


சோதனை சாவடியில் நவீன கண்காணிப்பு கேமராக்கள்
x

வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி சோதனை சாவடியில் நவீன கண்காணிப்பு கேமராக்களின் சேவையை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் உள்ள கல்வார்பட்டி சோதனை சாவடியில் நவீன கண்காணிப்பு கேமராக்களும், காசிபாளையத்தில் பொதுமக்களின் சொந்த செலவில் கண்காணிப்பு கேமராக்களும் வைக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்களின் தொடக்க விழா, காசிபாளையத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி தலைமை தாங்கினார். ஊர் முக்கியஸ்தர்கள் சுப்பாராயன், ராமலிங்கம், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வரவேற்றார்.

இந்த விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு அறையை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கூம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story