கரும்பு சாகுபடியில் நவீன தொழில்நுட்ப பயிற்சி
வடசேந்தமங்கலம் கிராமத்தில் கரும்பு சாகுபடியில் நவீன தொழில்நுட்ப பயிற்சி
திருவண்ணாமலை
செய்யாறு
செய்யாறு தாலுகா வடசேந்தமங்கலம் கிராமத்தில் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி நவீன தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் காமாட்சி தலைமை தாங்கினார்.
கரும்பு ஆராய்ச்சி நிலைய முனைவர் தங்கேஸ்வரி, பொற்கொடி ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடியில் தாக்கும் தற்போது புதிய நோய் அறிகுறிகளை விளக்கி கூறியும், நோய் தாக்கத்திலிருந்து கரும்பு சாகுபடி பாதிக்காத வண்ணம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் விளக்கம் அளித்தனர்.
இதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சியில் சண்முகம், செல்லபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஜெகதீசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story