தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவில் மாற்றம்


தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவில் மாற்றம்
x

தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பச்சேரி கிராமத்தில் இன்று (சனிக்கிழமை) ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்ச்சி மற்றும் செப்டம்பர் 1-ந்தேதி நெற்கட்டும்செவல் கிராமத்தில் பூலித்தேவன் பிறந்த நாள் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளூர், தென்காசி மாவட்டத்தின் பிற பகுதி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள், சமுதாய அமைப்புகளை சார்ந்தவர்கள் வருவார்கள். அவ்வாறு வருபவர்கள் கூட்டமாக செல்லாமல் சமூக இடைவெளியுடன் நான்கு நபர்கள் வீதம் சென்று மரியாதை செலுத்தி ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதன் காரணமாக சிவகிரி, சங்கரன்கோவில், திருவேங்கடம் ஆகிய தாலுகாக்கள் மற்றும் புளியங்குடி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எல்லைகள் ஆகிய பகுதிகளில் மட்டும் நேற்று முதல் வருகிற செப்டம்பர் 2-ந் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த நிகழ்ச்சிகளுக்கு வருபவர்கள் வாள், கத்தி, லத்தி, கற்கள் போன்ற பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. மேலும் அன்னதானம், பொங்கலிடுதல், பால்குடம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம் ஆகியவற்றுக்கும் தடை செய்யப்படுகிறது. அனைத்து வகையான வாடகை வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், வேன்கள், அகில இந்திய சுற்றுலா வாகனங்கள் ஆகியவை தடை உத்தரவு அமல்படுத்தப்படும் பகுதிகளுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story