தாமரைக்குளத்தை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு


தாமரைக்குளத்தை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு
x

நாகை தாமரைக்குளத்தை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்

நாகை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தாமரைக்குளம் சீரமைக்கப்பட்டு திறக்கப்படாமலேயே மீண்டும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. தாமரைக் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாமரைக்குளம் சுற்றுச் சுவரின் ஒரு பகுதி இடிந்துள்ளதால் அதன் வழியே சமூக விரோதிகள் உள்ளே புகுந்து குளத்தை பாழாக்கி வருகின்றனர். எனவே அந்த சுவரை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ உறுதியளித்தார். இதர சீரமைப்புப் பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் நகராட்சி அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ வலியுறுத்தினார். இந்த ஆய்வின் போது, நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகர்மன்ற உறுப்பினர் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story