நாமக்கல்லில் இந்து முன்னணி சார்பில் வைத்த விநாயகர் சிலைகள் மோகனூர் காவிரி ஆற்றில் கரைப்பு

நாமக்கல்லில் இந்து முன்னணி சார்பில் வைத்த  விநாயகர் சிலைகள் மோகனூர் காவிரி ஆற்றில் கரைப்பு
x

நாமக்கல்லில் இந்து முன்னணி சார்பில் வைத்த விநாயகர் சிலைகள் மோகனூர் காவிரி ஆற்றில் கரைப்பு

நாமக்கல்

மோகனூர்:

நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி கடந்த 1-ந் தேதி முதல் மோகனூர் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நேற்று நாமக்கல்லில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 9 விநாயகர் சிலைகள் மேளதாளத்துடன் ஊர்வலமாக மோகனூர் காவிரி ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டன. இதையடுத்து இந்து முன்னணியினர் காவிரி ஆற்றில் இறங்கி விநாயகர் சிலைகளை கரைத்தனர். மேலும் பொதுமக்கள் கொண்டு வந்த விநாயகர் சிலைகளும் ஆற்றில் கரைக்கப்பட்டன. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் நாமக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், மோகனூர் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் தீயணைப்பு, வருவாய்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story