மணமகள் வீட்டு மொய் பணம் திருட்டு


மணமகள் வீட்டு மொய் பணம் திருட்டு
x

திருச்சியில் ரெயில்வே திருமண மண்டபத்தில் மணமகள் வீட்டு மொய் பணத்தை திருடிய 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருச்சி

திருச்சியில் ரெயில்வே திருமண மண்டபத்தில் மணமகள் வீட்டு மொய் பணத்தை திருடிய 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருமணம்

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 59). இவருடைய மகளின் திருமணம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ரெயில்வே சொசைட்டி திருமண மண்டபத்தில் நடந்தது. திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கொடுத்த மொய் பணத்தை ஒரு பையில் போட்டு, அங்குள்ள ஒரு அறையில் சரவணன் வைத்திருந்தார்.

பின்னர் நிகழ்ச்சிகள் முடிந்து அவர்கள் மண்டபத்தை காலி செய்து சென்றுவிட்டனர். வீட்டுக்கு சென்று பார்த்த போது மொய் பணம் இருந்த பையை காணவில்லை. உடனே திருமண மண்டப மேலாளரை தொடர்பு கொண்டு மொய்பணம் இருந்த பை காணாமல் போனது குறித்து சரவணன் கூறினார். மண்டப மேலாளர், அந்த அறைக்கு சென்று பார்த்த போது அந்த மொய் பணம் இருந்த பை இருந்துள்ளது.

மொய் பணம் திருட்டு

உடனே சரவணன் திருமண மண்டபத்துக்கு வந்து பையை திறந்து பார்த்த போது பையில் பொய்பணம் இருந்த கவர்களில் சில திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, மொய் பணம் இருந்த பையை 2 பெண்கள் எடுத்துச்செல்வதும், அதில் இருந்து சில பண கவர்களை திருடி விட்டு, மீண்டும் பையை அதே அறையில் வைத்து சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த 2 பெண்கள் திருச்சி பெரிய மிளகுபாறையை சேர்ந்த நீலா, ஜெயா ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 2 பெண்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story