வி.மாதேப்பள்ளியில் மாதாந்திர ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி பணம் மோசடி


வி.மாதேப்பள்ளியில் மாதாந்திர ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி பணம் மோசடி
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி தாலுகா சூலாமலை கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, இவருடைய மனைவி முனிரத்தினம் ஆகிய 2 பேரும் சேர்ந்து வி.மாதேப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீ ஹரீஷ் எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் மாதாந்திர ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்தனர்.

சுமார் 300 உறுப்பினர்களிடம் பணத்தை முதலீடாக பெற்று, அவர்களுக்கு சீட்டு பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. மேலும் ஏலச்சீட்டில் சேர்ந்து பணத்தை முதலீடு செய்து இழந்தவர்களுக்கு தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டம் 1997-ன்படி பணத்தை பெற்று தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இந்த ஸ்ரீ ஹரீஸ் எண்டர்பிரைசஸ் சீட்டு நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் 2-வது குறுக்கு தெருவில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்.

இந்த தகவலை கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story