ஒவ்வொரு மாதமும் நலவாரிய ஓய்வூதியத்தை 10-ந் தேதிக்குள் வழங்க வேண்டும்௦-கலெக்டர் அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் மனு
தர்மபுரி:
தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் பேரவை சார்பில் நிர்வாகிகள் தர்மபுரி கலெக்டரிடம் ஒரு கோரிக்கை அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு 17 நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 35 லட்சம் தொழிலாளர்கள் தற்போது பதிவு செய்துள்ளனர். அனைத்து தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனசாக தலா ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் நலவாரிய ஓய்வூதியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10-ந் தேதிக்குள் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 60 வயது நிறைவடைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியத்தை உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்களின் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் ஆண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். கட்டுமான நல வாரியத்தில் வழங்கக்கூடிய உதவித்தொகை போல் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.