கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை-அதிகாரி தகவல்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை-அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அதன்படி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மாற்றுத்திறனாளிகளுக்கு 600 வழங்கப்படுகிறது.

இதேபோல் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, மாற்றுத்திறனாளிகளுக்கு 750, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.

தகுதிகள்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள், www.tnvelaivaaippu.gov.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் விண்ணப்ப படிவத்தினை நேரில் வந்தும் பெற்று கொள்ளலாம்.

மேலும், பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்துடன் உரிய ஆவணங்களின் நகல், அசலுடன், கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

சுய உறுதிமொழி ஆவணம்

மாற்றுத்திறனாளிகள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற தேவையில்லை. ஏற்கனவே உதவித் தொகை பெற்று வருபவராக இருப்பின் சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.


Next Story