நல்லம்பள்ளி அருகே தரமற்ற டி.வி. வழங்கி பொதுமக்களிடம் பணம் மோசடி-போலீசார் விசாரணை


நல்லம்பள்ளி அருகே தரமற்ற டி.வி. வழங்கி பொதுமக்களிடம் பணம் மோசடி-போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே எட்டியானூர், கொமத்தம்பட்டி, சாமிகவுண்டனூர், மிட்டாரெட்டிஅள்ளி, ரெட்டியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் ஒரு கும்பல், குறைந்த விலைக்கு முன்னணி நிறுவனம் ஒன்றின் எல்.இ.டி. டி.வி. வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்தது. பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு டி.வி.க்களை வழங்கினர். ஆனால் அவர்கள் கூறியபடி, முன்னணி நிறுவனத்தின் டி.வி.யை வழங்காமல், தரமற்ற டி.வி.யை வழங்கியதாக கூறப்படுகிறது. இதன்மூலம் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் அந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது.

தரமற்ற டி.வி.யை வாங்கி பாதிக்கப்பட்ட எட்டியானூர் கிராமத்தை சேர்ந்த இந்திராணி (வயது 50) என்பவர், இந்த மோசடி குறித்து அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் பிரபல முன்னணி நிறுவனத்தின் டி.வி.யை தருவதாக கூறி, மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடியில் தான் இழந்த பணத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறி இருந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story