27 பேரிடம் ரூ.78¾ லட்சம் மோசடி


27 பேரிடம் ரூ.78¾ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 27 பேரிடம் ரூ.78¾ லட்சம் மோசடி செய்த துணை கலெக்டர் உள்பட 4 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 27 பேரிடம் ரூ.78¾ லட்சம் மோசடி செய்த துணை கலெக்டர் உள்பட 4 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு வேலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அச்சமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 39). இவர்் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே நடந்த புகார் மேளாவில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், தான் உள்பட மொத்தம் 27 பேரிடம் போச்சம்பள்ளியை சேர்ந்த யாரப்பாஷா, ஓய்வுபெற்ற தாசில்தார் சண்முகம், விழுப்புரம் மாவட்ட துணை கலெக்டராக பணியாற்றி வந்த ரகுகுமார், தேன்கனிக்கோட்டை தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறினர்.

இதையடுத்து நாங்கள் 27 பேரும் மொத்தம் ரூ.78 லட்சத்து 74 ஆயிரம் அவர்களிடம் கொடுத்தோம். அதன் பின்னர் அவர்கள் பணி நியமன ஆணையை எங்களுக்கு வழங்கினர். அந்த ஆணையை எடுத்து கொண்டு பணியில் சேர சென்ற போது அது போலி ஆணை என தெரியவந்தது. எனவே, அவர்கள் 4 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து, தங்களது பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

4 பேர் மீது வழக்கு

இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், அவர்கள் 4 பேர் மீதும் 463 (போலியாக ஆவணம் தயாரித்தல்), 468 (ஏமாற்றும் நோக்கத்தோடு ஆவணம் தயாரித்தல்), 471 (போலி என தெரிந்தும், உண்மை என நம்ப வைத்து ஆவணங்களை வழங்குதல்), 420 (ஏமாற்றுதல்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story