காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.45 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை


காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.45 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் வாரச்சந்தை நடந்து வருகிறது. இந்த சந்தைக்கு காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பென்னாகரம், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், பொதுமக்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் 450 மாடுகள், 550 ஆடுகள் மற்றும் நாட்டுக்கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அவை ரூ.45 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டன. கடந்த வாரத்தை விட இந்த வாரம் கால்நடைகள் வரத்து குறைவாக இருந்ததாகவும், அதனால் விற்பனை மந்தமாக நடந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story