வீட்டின் கதவை உடைத்து பணம்-செல்போன் திருட்டு


வீட்டின் கதவை உடைத்து பணம்-செல்போன் திருட்டு
x

திருவோணம் அருகே நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து பணம் செல்போன் ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

திருவோணம் அருகே நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து பணம் செல்போன் ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பணம் செல்போன் திருட்டு

தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள நம்பிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது60). இவருடைய மனைவி மலர்க்கொடி(49). முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மகள் லெட்சுமிபிரியா, மகன் பவித்திரன் ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வீட்டின் பின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 2 பேர் வீட்டில் இருந்த ரூ.400 மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடினர்.

நகை தப்பியது

பின்னர் மர்ம நபர்கள் வீட்டின் ஒரு பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த லெட்சுமிபிரியா கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது திடுக்கிட்டு எழுந்த லெட்சுமிபிரியா கூச்சலிட்டார். உடனே அவரது தந்தை ரவிச்சந்திரன், அண்ணன் பவித்திரன் உள்ளிட்ட குடும்பத்தினர் அங்கு ஓடி வந்தனர். அப்போது அவர்கள் லெட்சுமி பிரியாவிடம் தங்க சங்கிலியை பறிக்க முயற்சித்த மர்ம நபர்களுடன் போராடினர். அப்போது ரவிச்சந்திரன், பவித்ரன் உள்ளிட்டோரை தாக்கி விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தம்பி ஓடி விட்டனர். இதனால் லெட்சுமி பிரியா கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலி தப்பியது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story