சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.8.83 லட்சம் மோசடி


சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.8.83 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:46 PM GMT)

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி ஓசூர் சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.8.83 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி ஓசூர் சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.8.83 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாப்ட்வேர் என்ஜினீயர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளி சூர்யா நகரை சேர்ந்தவர் முத்து நாராயணன் (வயது 27). பி.டெக் பட்டதாரி. இவர் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். கடந்த 17-ந் தேதி இவரது செல்போனில் வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் வந்தது.

அதில் பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதில் அதிக லாபம், கமிஷன் கிடைக்கும் என்றும், இதற்கு பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறப்பட்டு இருந்தது. இதை நம்பிய முத்துநாராயணன், அதில் குறிப்பிட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.

ரூ.8.83 லட்சம் மோசடி

பின்னர் அவர்கள் கூறியபடி 3 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 100-ஐ முத்து நாராயணன் அனுப்பினார். அந்த தொகை அனுப்பியும் எதிர்தரப்பில் இருந்து யாரும் அவரிடம் பேசவில்லை. இதனால் முத்து நாராயணன் அந்த நபர்களின் செல்போன் எண்ணுக்கு பேச முயன்றார். அப்போது அந்த எண் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த முத்து நாராயணன் இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story