பாரதியார் நினைவிடத்துக்கு செல்லும் சாலையை சீரமைக்க நிதி உதவி


பாரதியார் நினைவிடத்துக்கு செல்லும் சாலையை சீரமைக்க நிதி உதவி
x

மன்னார்குடி அருகே மேலநாகையில் பாரதியார் நினைவிடத்துக்கு செல்லும் சாலையை சீரமைக்க நிதி உதவியை கே.எஸ்.அழகிரி வழங்கினார்.

திருவாரூர்

மன்னார்குடி;

மன்னார்குடி அருகே மேலநாகையில் பாரதியார் நினைவிடத்துக்கு செல்லும் சாலையை சீரமைக்க நிதி உதவியை கே.எஸ்.அழகிரி வழங்கினார்.

முப்பெரும் விழா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன் தலைமை தாங்கினார். மன்னார்குடி நகர தலைவர் ஆர்.கனகவேல், மாநில துணைத்தலைவர் செந்தமிழ் அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு பேசினார்.

ரூ.1 லட்சம்

தொடர்ந்து ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்களுக்கும், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும் சான்றிதழ்களை கே.எஸ்.அழகிரி வழங்கினார். பின்னர் மன்னார்குடி அருகே உள்ள மேலநாகை கிராமத்தில் உள்ள பாரதியார் நினைவிடத்துக்கு கே.எஸ்.அழகிரி சென்று பார்வையிட்டார். அங்கு நினைவிடத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது நினைவிடத்திற்கு செல்லும் சாலை மிகவும் சேதம் அடைந்திருப்பதை கண்டு சாலையை சீரமைப்பதற்காக ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை நினைவிடத்தை பராமரித்து வரும் நிர்வாகி பூமிநாதனிடம் வழங்கினார்.


Next Story