பட்டாசு வியாபாரியை தாக்கி ரூ.500 வழிப்பறி


பட்டாசு வியாபாரியை தாக்கி ரூ.500 வழிப்பறி
x

தஞ்சையில் பட்டாசு வியாபாரியை தாக்கி ரூ.500 வழிப்பறி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை பிள்ளையார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் உத்திராபதி. இவருடைய மகன் சிவக்குமார் (வயது34). பட்டாசு வியாபாரியான இவர் சம்பவத்தன்று ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தஞ்சை பிள்ளையார்பட்டி குடிசை மாற்று வாரியம் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென 2 பேர் அவரை வழிமறித்து பீர்பாட்டில் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி பணத்தை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் தஞ்சை பிள்ளையார்பட்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர்(25), விக்னேஷ்(31) ஆகிய 2 பேர் சிவக்குமாரை தாக்கி ரூ.500-ஐ பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story