பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணம் பறிப்பு


பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணம் பறிப்பு
x

பாபநாசத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தஞ்சாவூர்

பாபநாசம்;

பாபநாசத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பணம் பறிப்பு

பாபநாசத்தை அடுத்த திருப்பாலைத்துறையிலுள்ள பெட்ரோல் பங்கில், களஞ்சேரி, மேலத்தெருவை சேர்ந்த குருமூர்த்தி(வயது42) பணியாற்றி வந்தார். நேற்று முன் தினம், பாபநாசம், படுகைபுதுத்தெருவை சேர்ந்த சவரிமுத்து மகன் மண்டை தினேஷ் (28), இதே பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் திவாகர் (30), கபிஸ்தலம், சீதாலெட்சுமிபுரத்தை சேர்ந்த அன்பழகன் மகன் அருண்குமார் (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து, பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனத்துக்கு ரூ.200-க்கு பெட்ரோல் நிரப்பி விட்டு, மேலும் பாட்டிலில் ரூ.100-க்கு பெட்ரோல் வாங்கிக் கொண்டு, பணம் தரமறுத்தனர்.

கைது

இதனால் ஊழியர், குருமூர்த்தி, பெட்ரோலுக்கான பணத்தைக் கேட்ட போது, அவரை 3 பேரும் சேர்ந்து தாக்கி, ரூ.9400-ஐ பறித்துக் கொண்டு, தப்பிஓடிவிட்டனர். இது குறித்து பாபநாசம் போலீஸ் நிலையத்தில், குருமூர்த்தி புகார் அளித்தார். இதன் பேரில், பாபநாசம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மண்டை தினேஷ், அருண்குமார் மற்றும் திவாகர் ஆகிய 3 பேரையும் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவர்களை மாஜிஸ்திரேட் அப்துல் கனி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதன்பேரில் 3 பேரும் பாபநாசம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story