வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
கபிஸ்தலம் அருகே வழிபறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கபிஸ்தலம்,
கபிஸ்தலம் அருகே வழிபறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விவசாயி
கபிஸ்தலம் அருகே உள்ள திருவைகாவூர் ஊராட்சி அதியம்பநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா (வயது29). விவசாயி இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் திருவையாறு சென்று விட்டு அங்கிருந்து மீண்டும் தனது சொந்த ஊரான அதியம்பநல்லூருக்கு திரும்பி வந்தார்.
கைது
அப்போது திருவையாறு அருகே உள்ள ஈச்சங்குடி மெயின் ரோட்டில் நின்றுகொண்டு இருந்த ஈச்சங்குடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சந்திரசேகரன் மகன் ராஜதுரை(34) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்த சிவாவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.370-ஐ பறித்து சென்று விட்டார். இது குறித்து சிவா கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாா். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.