மின்சாதன கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு


மின்சாதன கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
x

முத்துப்பேட்டையில் மின்சாதன கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருவாரூர்

முத்துப்பேட்டை;

முத்துப்பேட்டை ஆசாத்நகரில் செறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார்(வயது40) என்பவர் மின்சாதன பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ராஜ்குமார் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை அவர் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பாா்த்தார். அப்போது கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் திருட்டுப்போய் இருந்தது. இது குறித்து ராஜ்குமார் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபா்களை தேடி வருகிறார்கள்.


Next Story