நாள்ேதாறும் 8.61 லட்சம் பெண்கள் கட்டணமில்லா பயணம்


நாள்ேதாறும் 8.61 லட்சம் பெண்கள் கட்டணமில்லா பயணம்
x

Money theft by breaking the bill in Umamakeshwarar temple

தஞ்சாவூர்

கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழக பஸ்களில் நாள்தோறும் 8.61 லட்சம் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்து வருகிறார்கள் என்று மேலாண் இயக்குனர் ராஜ்ேமாகன் கூறினார்.

குடியரசு தின விழா

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழா நடந்தது. இதில் மேலாண் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

8.61 லட்சம் பெண்கள் கட்டணமில்லா பயணம்

கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக்கழகம் தமிழக அரசின் பொது மக்கள் பயன்பாட்டிற்கான திட்டங்களை செயல்படுத்துவதில் உறுதுணையாகவும், முன்மாதிரியாகவும் உள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் ஆகிய 12 மாவட்டங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய இயக்கப்பகுதியை கொண்ட இந்த போக்குவரத்து கழகத்தில் 3184 பஸ்கள் நாள்தோறும் 15 லட்சம் கி.மீ. இயக்கப்படுகிறது.

இதன் மூலம் 23 லட்சம் பயணிகளை சுமந்து சேவையாற்றி வருகிறது. குறிப்பாக டவுன் பஸ்களில் 8.61 லட்சம் பெண்களும், 5.30 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும், 6 ஆயிரம் மாற்றுதிறனாளி மற்றும் அவர்களது உதவியாளர்களும், கட்டணமில்லாமல் பயணம் செய்து வருகின்றனர். 300 திருநங்கை பயணிகளும் கட்டணம் இல்லாமல் பயணித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

இதனைத்தொடர்ந்து 168 பேருக்கு பதவி உயர்வுக்கான ஆணையையும், அதிக வருவாய் ஈட்டிய கண்டக்டர்கள், அதிக டீசல் செயல்திறன் ஈட்டிய டிரைவர்கள், சிறப்பாக பணியாற்றிய தொழில்நுட்பப் பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், டிரைவர் பயிற்சியாளர்கள், என்ஜினீயர்கள், போக்குவரத்து மேற்பார்வையாளர்கள், கிளை மேலாளர்கள் உள்ளிட்ட 451 தொழிலாளர்களுக்கு பரிசுகளையும் மேலாண் இயக்குனர் வழங்கினார்.

போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் குழந்தைகளின் தனித்திறனை அடையாளம் கண்டு ஊக்கமளித்திடும் வகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, ஓவியப்போட்டி, நடனப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் அனைத்து மண்டலங்களிலும் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற 90 குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கலந்து கொண்டோர்

விழாவில் பொது மேலாளர்கள் ஜெபராஜ் நவமணி, முகமது நாசர், கோவிந்தராஜன், துணை மேலாளர்கள் முரளி, சிங்காரவேலு, ராஜா, ஸ்ரீதர், கணேசன், உதவி மேலாளர்கள் ராஜேஷ். ரவிக்குமார், ராஜசேகர் மற்றும் போக்குவரத்துக்கழக அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்களின் குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story