டாக்டர் எனக்கூறி ரூ.5 ஆயிரம் அபேஸ் செய்த பெண் கைது


டாக்டர் எனக்கூறி ரூ.5 ஆயிரம் அபேஸ் செய்த பெண் கைது
x

தஞ்சையில், டிராவல்ஸ் உரிமையாளரிடம் டாக்டர் எனக்கூறி ரூ.5 ஆயிரம் அபேஸ் செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். செல்போன் செயலி மூலம் பணம் அனுப்புவதாக கூறி அவர் ஏமாற்றியது அம்பலமானது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சையில், டிராவல்ஸ் உரிமையாளரிடம் டாக்டர் எனக்கூறி ரூ.5 ஆயிரம் அபேஸ் செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். செல்போன் செயலி மூலம் பணம் அனுப்புவதாக கூறி அவர் ஏமாற்றியது அம்பலமானது.

டிராவல்ஸ் உரிமையாளர்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் யோகராஜ்(வயது 45). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் இவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேராவூரணியை சேர்ந்த நிஷாந்தினி(30) என்பவர், தான் ஒரு டாக்டர் எனவும், சென்னைக்கு அவசரமாக செல்ல வேண்டியுள்ளதாக கூறி யோகராஜிடம் கார் வாடகைக்கு கேட்டுள்ளார்.யோகராஜூம், காருக்கு வாடகை பேசி நிஷாந்தினியை காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். அப்போது நிஷாந்தினி, தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு கூறியுள்ளார். மருத்துவக்கல்லூரிக்கு சென்ற நிஷாந்தினி, எனக்கு தெரிந்தவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அவசரமாக எனக்கு ரூ.5 ஆயிரம் தேவைப்படுகிறது. அவரை பார்த்துவிட்டு வந்த உடன், மொபைலுக்கு சார்ஜ் ஏற்றிக்கொண்டு, உங்களுக்கு செல்போன் செயலி மூலம் பணத்தை திருப்பி தருகிறேன் என கூறியுள்ளார்.

ரூ.5 ஆயிரம் மோசடி

இதனை உண்மை என நம்பிய யோகராஜ் தன்னிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தை நிஷாந்தினியிடம் கொடுத்தார். பணத்தை வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்ற நிஷாந்தினி வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த யோகராஜ் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த யோகராஜ் இது குறித்து தஞ்சை நகர தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து யோகராஜ் கூறிய அடையாளங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு நிஷாந்தினியை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த நிஷாந்தினியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

டாக்டர் இல்லை

நிஷாந்தினியிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்டாக்டர் இல்லை என்பதும், திருச்சியிலும் இதுபோல பலரிடம் அவர் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.மேலும் இதேபோன்று வேறு பகுதியிலும் நிஷாந்தினி மோடியில் ஈடுபட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story