ஏ.டி.எம். கார்ைட பயன்படுத்தி பணம் திருடியவர் கைது


ஏ.டி.எம். கார்ைட பயன்படுத்தி பணம் திருடியவர் கைது
x
தினத்தந்தி 5 Jan 2023 6:45 PM GMT (Updated: 5 Jan 2023 6:47 PM GMT)

பொதுமக்களுக்கு உதவி செய்வது போல நடித்து ஏ.டி.எம். கார்ைட பயன்படுத்தி பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை

தேவகோட்டை,

பொதுமக்களுக்கு உதவி செய்வது போல நடித்து ஏ.டி.எம். கார்ைட பயன்படுத்தி பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

அப்பாவி பொதுமக்கள்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க வரும் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி அவர்களுக்கு உதவி செய்து பணம் எடுத்து கொடுப்பது போல் நடித்து அவர்களது ஏ.டி.எம். கார்டை திருடி பின்னர் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடும் சம்பவம் அடிக்கடி நடப்பதாக தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமாருக்கு புகார் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் தேவகோட்டை நகர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்்டர் சண்முகவேல், போலீஸ்காரர்கள் சிலம்பரசன், சோனை முத்து ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.

வாலிபர் கைது

இந்நிலையில் நேற்று முன்தினம் கோட்டை அம்மன் கோவில் அருகில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் அவர் தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டினம் கிழக்கு தெருவை சேர்ந்த சையது இப்ராஹிம் (வயது 32) என்பதும், அடிக்கடி தேவகோட்டைக்கு வந்து ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி அவர்களின் ஏ.டி.எம். வாங்கி, வேறு கார்டை மாற்றி கொடுத்து அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடியதும், அந்த பணத்தின் மூலம் நகைகள் வாங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story