பணப்பரிவர்த்தனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
பணப்பரிவர்த்தனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
நீலகிரி
ஊட்டி
மத்திய ரிசர்வ் வங்கி சார்பில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் பாதுகாப்பான பயன்பாடு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கியது. இதனை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட உள்ளது. இதில் பணப்பரிவர்த்தனையின்போது செய்யப்படும் மோசடி, ஆன்லைன் செயலிகளை கவனமாக கையாளுதல், ரகசிய எண்களை ரகசியமாக வைத்து கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் கரூர் வைஸ்யா வங்கி மண்டல மேலாளர் சீனிவாசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா, கரூர் வைஸ்யா வங்கி கிளை மேலாளர் ரவிக்குமார் உள்பட வங்கியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story