2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை


2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
x

2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடியை அடுத்த தெக்குப்பட்டு கிராமத்தில் ஏரிக்கரையோரம் அமைந்துள்ள பெருமாள் கோவில் மற்றும் ஓம் சக்தி கோவில் ஆகியவை அடுத்தடுத்து உள்ளறன. இந்த கோவில்களில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் உண்டியல் உடைத்து பக்தர்கள் செலுத்திய காணிக்ைக பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

காலை அவ்வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து போலீசார் மற்றும் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அம்பலூர் போலீசார் விநை்து சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் 2 கோவில்களின் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மரம் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story