ரேடியோ காலர் மூலம் கண்காணிக்கப்படும்


ரேடியோ காலர் மூலம் கண்காணிக்கப்படும்
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிடிபட்ட காட்டு யானை ரேடியோ காலர் மூலம் கண்காணிக்கப்படும் என வனத்துறையினர் உறுதியளித்தனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் தாலுகா தேவாலா மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானை (மக்னா) வீடுகளை உடைத்து அரிசி உள்ளிட்ட தானியங்களை தின்று அட்டகாசம் செய்தது. தொடர்ந்து வாழவயல் பகுதியை சேர்ந்த பாப்பாத்தி என்ற பெண்ணை தாக்கி கொன்றது. இதனால் காட்டு யானையை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. தொடர்ந்து 18 நாட்களாக வனத்துறையினர் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் நேற்று முன்தினம் தேவாலா நீடில்ராக் வனப்பகுதிக்கு வந்த காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். தொடர்ந்து முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டது. முன்னதாக காட்டு யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. பின்னர் வனத்துறையினர் கொண்ட குழு அப்பகுதியில் முகாமிட்டு காட்டு யானையை கண்காணித்து வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ரேடியோ காலர் பொருத்தப்பட்ட உள்ளதால், காட்டு யானை நடமட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றனர்.


Next Story