மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்துவது குறித்த கண்காணிப்பு குழு கூட்டம்


மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்துவது குறித்த கண்காணிப்பு குழு கூட்டம்
x

மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்துவது குறித்த கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவமனைகளில் சேகரமாகும் மருத்துவ கழிவுகளை உரிய முறைப்படி சேகரித்து அப்புறப்படுத்துவது தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மருத்துவமனையில் இருந்து வரும் மருத்துவ கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவதை கண்காணித்து தடுக்க வேண்டும். பொது திட கழிவுகளுடன் மருத்துவ கழிவுகள் கலந்திடாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆரம்ப சுகாதார மற்றும் பொது மருத்துவமனைகளில் இருந்து பெறப்படும் கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்துவதை உறுதி செய்திட வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் பிரபுசங்கர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சீனிவாசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், இணை இயக்குனர் (சுகாதாரம்) சுதர்சன ஜேசுதாஸ் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story