டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய குரங்கு மின்சாரம் தாக்கி சாவு
கழுகுமலையில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய குரங்கு மின்சாரம் தாக்கி இறந்தது.
தூத்துக்குடி
கழுகுமலை:
கழுகுமலை முருகன் கோவில் மேலவாசல் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது நேற்று சில குரங்குகள் ஏறி விளையாடின. அப்போது திடீரென ஒரு குரங்கு மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது. இதனை கண்டதும் மற்ற குரங்குகள் அலறியபடி அங்கும், இங்கும் ஓடியது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கழுகுமலை போலீசார், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை அலுவலர் ராமசாமி மற்றும் வனத்துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தி குரங்கினை எடுத்து சென்றனர்.
கழுகுமலை பகுதிகளில் சுற்றி திரிந்து அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதியில் விட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story