பெருந்துறை அருகே மொபட்-கார் மோதல்; விவசாயி பலி


பெருந்துறை அருகே மொபட்-கார் மோதல்; விவசாயி பலி
x

பெருந்துறை அருகே மொபட்-கார் மோதல்; விவசாயி பலி

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை துடுப்பதி அருகே உள்ள வீராச்சிபாளையத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 75). விவசாயியான இவர் கடந்த 9-ந் தேதி அன்று மாலை சரளை பள்ளக்காட்டூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மாலையில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். சரளை தேசிய நெடுஞ்சாலை அருகே சென்றபோது மொபட்டும், எதிரே வந்த காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட சின்னசாமி படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சின்னசாமி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்துக்கு காரணமான கார் டிரைவரான கோவையை சேர்ந்த செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story