மொபட் கவிழ்ந்து விவசாயி பலி


மொபட் கவிழ்ந்து விவசாயி பலி
x
தினத்தந்தி 8 Sept 2023 1:00 AM IST (Updated: 8 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

மொபட் கவிழ்ந்து விவசாயி பலியானார்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:-

ஊத்தங்கரை தாலுகா படவனூர்கேட் பகுதியை சேர்ந்தவர் ரகுராமன் (வயது 48). விவசாயி. இவர் மொபட்டில் கெரிகேப்பள்ளி- கல்லாவி சாலையில் கெரிகேப்பள்ளி அரசு பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மொபட் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் சாமல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story