மொபட் திருட்டு; வாலிபா் கைது
நீடாமங்கலம் அருகே மொபட் திருடியதாக வாலிபர் ைகது செய்யப்பட்டு உள்ளார்.
திருவாரூர்
நீடாமங்கலம், பிப்;
நீடாமங்கலம் அருகே மொபட் திருடியதாக வாலிபர் ைகது செய்யப்பட்டு உள்ளார்.
மொபட் திருட்டு
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூர் ெரயில்வேகேட் நாகை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது60). இவர் தனக்குச்சொந்தமான மொபட்டை தனது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். சம்பவத்தன்று காலை வாலிபர் ஒருவர் குணசேகரனின் மொபட்டை திருடி செல்ல முயன்றாா்.
கைது
இதைக்கண்ட குணசேகரன் விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கொரடாச்சேரியைச் சேர்ந்த கணேஷ் (19) என்பதும், குணசேகரனின் மொபட்டை திருடியதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கணேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறர்கள்.
Related Tags :
Next Story