2 வீடுகளில் மொபட் திருட்டு


2 வீடுகளில் மொபட் திருட்டு
x

சேரன்மாதேவியில் 2 வீடுகளில் மொபட் திருட்டு

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி சென்னைராஜபுரம் தெருவைச் சேர்ந்தவர்கள் ராமர், சுடலை. விவசாயிகளான இவர்கள் நேற்று முன்தினம் இரவில் தங்களது வீடுகளின் முன்பு மொபட்டுகளை நிறுத்தி இருந்தனர். பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் 2 மொபட்டுகளையும் திருடிச் சென்றனர்.

இதேபோல் சேரன்மாதேவி- டவுன் மெயின் ரோட்டில் கன்னடியன் கால்வாய் கரையில் அமைந்துள்ள சாட்டுப்பால விநாயகர் கோவிலுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் 5 பேர் கொண்ட கும்பல் சென்றது. அவர்கள், கோவிலின் கதவை கடப்பாரை கம்பியால் உடைக்க முயன்றனர்.

அப்போது அந்த வழியாக ஆட்கள் வந்ததால், கொள்ளை முயற்சியை கைவிட்ட கும்பல் 2 மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றது. இந்த காட்சிகள் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்த புகார்களின்பேரில், சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story