செயற்கைக்கோள் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளோம்


செயற்கைக்கோள் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளோம்
x

கணினி புரட்சியைப்போல வரும் காலங்களில் செயற்கைக்கோள் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளோம் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

தஞ்சாவூர்


கணினி புரட்சியைப்போல வரும் காலங்களில் செயற்கைக்கோள் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளோம் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

பேட்டி

தஞ்சையில், சந்திராயன் திட்ட முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவதுஅறிவியல் தொழில்நுட்பம் எல்லா துறைகளிலும் அதன் பங்களிப்பை செய்து வருகிறது. அந்தவகையில் மருத்துவம், மருத்துவ அறுவை சிகிச்சையும் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்துள்ளது. கத்திரியால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலத்தில் இருந்து தற்போது எந்திரம் மூலம் மிக சிறப்பாக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுகிறது.ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு புதிய வகை அறுவை சிகிச்சை தொழில்நுட்பங்கள் வெளியாகிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. டாக்டர்கள், அவர்களின் வாழ்நாள் முழுவதும் புதிதாக கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

அறிவியல் வளர்ச்சி

கொரோனா தாக்கத்தில் இருந்து 3 ஆண்டுகளில் மீண்டு வருவதற்கு அறிவியல் வளர்ச்சியால் தான் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அறிவியல் வளர்ச்சி இல்லை என்றால் கொரோனாவில் இருந்து மீள 10 ஆண்டு காலம் ஆகி இருக்கும். உலகளவில், இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தால், நோய்களும் அதிகரிக்கும் சூழலில், டாக்டர்களின் தேவைகளும் அதிகமாக உள்ளது. மேலும், அறிவியலும் தேவையாக உள்ளது.உலக அளவில் விண்ணுக்கு பல ஆயிரம் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது, நமது நாட்டில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பட்டுள்ளது. மேலும் மற்ற நாடுகளுக்காக இந்தியாவில் இருந்து சுமார் 350 செயற்கைக்கோள் அனுப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் மூலம் பல்வேறு பணிகள்

கொரோனா காலத்தில் மட்டும் உலகளவில் 3 ஆயிரம் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளது. கணிணி புரட்சியை போல வரும் காலங்களில் செயற்கைகோள் மூலம் பல்வேறு பணிகளை செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story