முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் ஆய்வு


முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் ஆய்வு
x
திருப்பூர்


குண்டடம் ஒன்றியம் வடசின்னாரிபாளையம் ஊராட்சி காரப்பாளையம், பொன்னங்காளிவலசு, வீணம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலாளர்எம்.கருணாகரன் தலைமையில், கலெக்டர் எஸ்.வினீத் முன்னிலையில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வில் பள்ளியின் சமையலறைக்கு சென்று காலை உணவுகளையும், மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்குவதையும், காலை உணவு திட்ட செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன், தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிவசண்முகம், வடசின்னாரிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பி.மகேஸ்வரி பிரகாஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


Next Story