மோர்தானா அணை நிரம்பியது


மோர்தானா அணை நிரம்பியது
x

தொடர் மழை காரணமாக மோர்தானா அணை நிரம்பி 163 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது.

வேலூர்

நிரம்பியது

வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணை குடியாத்தம் அடுத்த மோர்தானா அணையாகும். சுமார் 11.50 மீட்டர் உயரமும், 261 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது. கடந்த சில நாட்களாக மோர்தனா அணைக்கு தண்ணீர் வரும் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையாலும், தொடர்ந்து மோர்தானா அணைப்பகுதியில் பெய்த மழையாலும் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.

இதனால் 11.40 மீட்டர் உயரம் இருந்த மோர்தானா அணையின் நீர்மட்டம் திடீரென 10 சென்டிமீட்டர் உயர்ந்தது.

163 கன அடி தண்ணீர்

அணை நிரம்பி சுமார் 163 கனஅடி தண்ணீர் வழிந்தோடியது. இந்தநிலையில் மோர்தானா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் அணை நீர்மட்டம் அதிகரித்து அணையின் நீர்மட்டம் 11.52 மீட்டராக உயர்ந்தது.

அதிக அளவு தண்ணீர் வழிந்தோடுவதை அறிந்த சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மோர்தானா அணை நிரம்பி வழிவதை தொடர்ந்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நீர்வளத்துறை வேலூர் கோட்ட செயற்பொறியாளர் ரமேஷ் ஆகியோர் உத்தரவின் பேரில் நீர்வளத்துறையினர், வருவாய்த் துறையினர் மோர்தானா பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story