கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்


கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்
x

நெமிலி, அரக்கோணம், வாலாஜா வட்டாரங்களில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை

ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள் என 3,620 குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களில் 56 குழந்தைகள் கடந்த ஆண்டு உடனடியாக பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு அவருடைய இடைநிற்றல் காரணங்கள் என்ன என்பதை கண்டறிந்து, அவர்களுக்கான போதிய விழிப்புணர்வுகள், அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று நடப்பாண்டிலும் இதற்கான பணிகளை அனைத்து துறை அலுவலர்களும், ஒருங்கிணைந்து செய்திட வேண்டும்.

கொசு ஒழிப்பு

டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் பகுதிகள் என கண்டறியப்பட்ட நெமிலி, அரக்கோணம், வாலாஜா வட்டாரங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப் படுத்த வேண்டும். மேலும், பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் காய்கறி தோட்டம் அமைப்பது குறித்து அதற்கான இடங்களை ஒதுக்கி தரவும், அங்கு தண்ணீர் வசதிகள் இருப்பதை உறுதி செய்யவும் தாசில்தார்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், திட்ட இயக்குனர் லோகநாயகி, அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story