கொசு மருந்து அடிக்கும் பணி
ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்தது
மயிலாடுதுறை
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட அனுமந்தபுரம், கொள்ளிடம், தைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் கொசுக்கள் அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்தது. இந்த பணியை வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீர், சாக்கடை நீரை அகற்ற உத்தரவிட்டார். மேலும், வீடுகளில் உள்ள பழைய டையர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் மழை நீர் தேங்காமல் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத்தலைவர் சிவப்பிரகாசம், வட்டார சுகாதார ஆய்வாளர் கொளஞ்சிநாதன், சுகாதார மேற்பார்வையாளர் கருணாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story