புல்லூர் தடுப்பனை நிரம்பி வழிகிறது
தமிழக- ஆந்திர பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் புல்லூர் தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதனால் பாலாற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது.
தமிழக- ஆந்திர பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் புல்லூர் தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதனால் பாலாற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது.
நிரம்பி வழிகிறது
வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் புயல் காரணமாக சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வாணியம்பாடி அருகே கங்குந்தி ஊராட்சி பெரும்பள்ளம் பகுதியில் உள்ள 15 அடி உயரமுள்ள புல்லூர் தடுப்பணை நிரம்பி வழிகிறது.
இதன் காரணமாக பராலற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது. இதனால் இரு மாநில பக்தர்களும், தடுப்பணையை கடந்து கனகநாச்சி அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டாம் என ஆந்திர மாநில அரசு தடை விதித்துள்ளது.
எச்சரிக்கை
புல்லூர் தடுப்பணையை தாண்டி வெளியேறும் உபரி நீர் திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம், அம்பலூர், கொடையாஞ்சி வழியாக வாணியம்பாடி நோக்கி பாலாற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வாணியம்பாடி பாலாற்றில் ஓம் சக்தி கோவில் அருகே உள்ள பாலம் தண்ணீரில் மூழ்கி உள்ளது. அந்த பகுதியை வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில் குமார் பார்வையிட்டார். மேலும் பாலத்தின் இருபுறமும் தடுப்பு வேலி அமைத்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாணியம்பாடி பகுதியில் உள்ள பாலாற்று பகுதிகளிலும், ஏரி, குளங்கள் பகுதியிலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டி வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, தாசில்தார் சம்பத், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.