மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்து தாய், மகள் பலி


மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்து தாய், மகள் பலி
x

மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்து தாய், மகள் பலியானார்கள்.

திருச்சி

மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்து தாய், மகள் பலியானார்கள்.

தாய்-மகள்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே உள்ள கோசிபட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி பிரியா (வயது 25). இந்த தம்பதிக்கு வர்ஷினி என்ற 8 மாத குழந்தை உள்ளது. நேற்று மாலை பிரியா தனது மகளை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்றார். இதைத்தொடர்ந்து அவர் கிணற்றில் மின் மோட்டார் சுவிட்சை போட்டு விட்டு, கிணற்றில் உள்ள குழாயில் தண்ணீர் ஊற்றுகிறதா? என கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தார்.

சாவு

அப்போது, எதிர்பாராதவிதமாக பிரியா குழந்தையுடன் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் கிணற்றில் உள்ள தண்ணீரில் மூழ்கி இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதை அறிந்த கிராம மக்கள் இருவரின் உடலையும் மீட்டனர். பின்னர் இது குறித்து புத்தானத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் தவறி விழுந்த தாயும், குழந்தையும் இறந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை எற்படுத்தி உள்ளது.


Next Story