தாய்-குழந்தைகளை தாக்கியவர் கைது


தாய்-குழந்தைகளை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 6 May 2023 12:30 AM IST (Updated: 6 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

மூன்றடைப்பு அருகே தாய்-குழந்தைகளை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

மூன்றடைப்பு அருகே ஆழ்வாநேரியைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வள்ளி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இசக்கிபாண்டிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் வள்ளி, கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து அவருடைய 2 குழந்தைகளும் இசக்கிபாண்டியின் தாயார் முப்புடாதி வீட்டில் வசித்தனர்.

நேற்று முன்தினம் இசக்கிபாண்டி மது குடித்து விட்டு தனது தாயாரின் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த முப்புடாதி மற்றும் தன்னுடைய 2 மகன்களையும் இசக்கிபாண்டி மட்டையால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த 3 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், மூன்றடைப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து இசக்கிபாண்டியை கைது செய்தனர்.


Next Story