மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை
பொன்னமராவதியில் மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.
பொன்னமராவதி:
வீட்டு வசதி வாரிய குடியிருப்பில்...
திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா பாலக்குறிச்சி அருகே பெத்தகோன்பட்டியை சேர்ந்தவர் வீரானந்தம். இவரது மனைவி ஜெயபாரதி (வயது 36). இவர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஸ்ரீ ஹரி (8) என்ற மகனும் உள்ளார். வீரானந்தம் பக்ரைன் நாட்டில் ேவலை பார்த்து வருகிறார். ெஜயபாரதி, ஸ்ரீஹரி ஆகிய 2 பேரும் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தனர்.
தாய்-மகன்
கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக ெஜயபாரதி தனது மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாய்-மகன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக் கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் தாய்-மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.