பிறந்த குழந்தைக்கு புகட்ட பால் சுரக்காததால் தாய் தற்கொலை


பிறந்த குழந்தைக்கு புகட்ட பால் சுரக்காததால் தாய் தற்கொலை
x

பிறந்த குழந்தைக்கு புகட்ட பால் சுரக்காததால் தாய் தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

குன்னம்:

விஷம் குடித்தார்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளப்பாடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி. விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 20). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு புகட்ட அவருக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்று கூறப்படுகிறது. சில நாட்கள் காத்திருந்தும் தாய்ப்பால் சுரக்காததால் மனம் உடைந்த விஜயலட்சுமி கடந்த 1-ந் தேதி தனது கணவர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) எடுத்து குடித்துள்ளார்.

சாவு

இதை அறிந்த உறவினர்கள் உடனடியாக விஜயலட்சுமியை மீட்டு அரியலூர் மற்றும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்த தகவலின்பேரில் குன்னம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கருப்புசாமி கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விசாரணை

விஜயலட்சுமிக்கு திருமணமாகி ஒரு ஆண்டே ஆவதால் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி கோட்டாட்சியர் நிறைமதி விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் கொளப்பாடி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story