கோவில் குளத்தில் குதித்து தாய்-சிறுமி தற்கொலை


கோவில் குளத்தில் குதித்து தாய்-சிறுமி தற்கொலை
x

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் குளத்தில் குதித்து தாய்-சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் குளத்தில் குதித்து தாய்-சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திருமுக்குளம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் மையப்பகுதியில் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் ஒரு சிறுமி மற்றும் பெண்ணின் உடல்கள் மிதப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் வந்தது.

தீயணைப்பு நிலைய அதிகாரி குருசாமி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று குளத்துக்குள் மிதந்த 2 பேரின் உடல்களை மீட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார், 2 பேரின் உடல்களையும் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாய்-மகள் தற்கொலை

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இறந்த 2 பேர் பற்றிய விவரம் தெரியவந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் மனைவி மகாலட்சுமி (வயது36), இவர்களது மகள் அங்காள ஈசுவரி (12) என்பது உறுதி செய்யப்பட்டது. அங்காள ஈசுவரி 7-ம் வகுப்பு மாணவி ஆவார்..

தாயும், மகளும் குடும்ப பிரச்சினை காரணமாக குளத்தில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. தாய், மகள் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story