கள்ளக்காதல் தகராறில் தாய், மகள் வெட்டி கொலை


கள்ளக்காதல் தகராறில் தாய், மகள் வெட்டி கொலை
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

செங்கம் அருகே கள்ளக்காதல் தகராறில் தாய்-மகள் வெட்டிக்கொல்லப்பட்டனர்.

திருவண்ணாமலை

செங்கம்

செங்கம் அருகே கள்ளக்காதல் தகராறில் தாய்-மகள் வெட்டிக்கொல்லப்பட்டனர்.

கள்ளக்காதல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் அருகே உள்ள அடிவாரம் சாமலை பகுதியை சேர்ந்தவர் பரிமளா (வயது 46). இவரது கணவர் துரை கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இவர்களுக்கு லோகேஷ் (15) என்ற மகனும், ராஜேஸ்வரி (16), ரோகினி (19) என 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த காமராஜ் (48) என்பவருக்கும் பரிமளாவிற்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதில் தகாத உறவு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

வெட்டிக்கொலை

கடந்த சில தினங்களாக இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த காமராஜ் அருகே இருந்த கொடுவாளால் பரிமளாவை வெட்டி உள்ளார். அதை தடுக்க வந்த அவரது மகள் ராஜேஸ்வரியையும் வெட்டியதில் இருவரும் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமரன் மற்றும் போலீசார் பரிமளா மற்றும் ராஜேஸ்வரி இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரண்

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காமராஜ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமரன் மன்னிலையில் சரணடைந்தார். இது குறித்து செங்ம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story