தாய்-மகள் கடத்தலா? போலீசார் விசாரணை


தாய்-மகள் கடத்தலா? போலீசார் விசாரணை
x

தாய்-மகள் கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

இலுப்பூர் அருகே கீழஎண்ணை பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம். இவரது மனைவி ஜான்சிராணி (வயது 30). இவர்களுக்கு ஒரு வயதில் தனிஷா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஜான்சிராணிக்கு அவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டில் இருந்து தனது மகளுடன் வெளியே சென்ற ஜான்சிராணி வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்சிராணி, தனிஷா ஆகியோரை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story