2 பெண் குழந்தைகளுடன் தாய் மாயம்
2 பெண் குழந்தைகளுடன் தாய் மாயமானார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை பகுதியை சேர்ந்த ராஜேஷ். இவரது மனைவி சந்தியா (வயது 25). இவர்களுக்கு நிலா ஸ்ரீ (4), மகாஸ்ரீ (2) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சந்தியா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் சந்தியா, குழந்தைகளுடன் கடந்த 25-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன்பிறகு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து சந்தியாவின் தந்தை பாரதி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story